Home இந்தியா 250 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இண்டிகோ ஒப்பந்தம்!

250 விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இண்டிகோ ஒப்பந்தம்!

824
0
SHARE
Ad

????????????????????புது டெல்லி, ஆகஸ்ட் 18 – இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ், இதுவரை இல்லாத அளவில் சுமார் 26.55 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 250 புதிய ஏர்பஸ் ஏ320 நியோ விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

உலக அளவில் ஏர்பஸ் நிறுவனத்திடம் இவ்வளவு பெரிய வர்த்தகத்தை இண்டிகோ நிறுவனம் மட்டுமே மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ320 ரக விமானங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள இண்டிகோ நிறுவனம், கடந்த 2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை 530 விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தங்களின் படி, ஏர்பஸ் நிறுவனம், கடந்த 2005-ல் 100 விமானங்களையும், 2011-ல் 180 விமானங்களையும் இண்டிகோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இண்டிகோவைத் தவிர, ஏர்பஸ் நிறுவனம் இதுவரை இந்தியாவில் பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்களிடம் 195 விமானங்களை விற்பனை செய்துள்ளது.