கொழும்பு, ஆகஸ்ட் 18 – இலங்கையில் பிரதமரை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று சுமூகமான முறையில் நடைபெற்றது. காலை 7:௦௦ மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4:௦௦ மணிக்கு முடிவடைந்தது. இத்தேர்தலில், 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போதய நிலவரப்படி, ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 41.3 சதவீத வாக்குகளும், ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.
இதற்கிடையே, ஒருவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றாலும், ராஜபக்சே பிரதமராக அனுமதிக்க மாட்டேன் என அந்நாட்டின் அதிபர் மைத்திரி சிறிசேனா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.