Home Featured உலகம் பாங்காக் குண்டு வெடிப்பு – சிங்கப்பூர் பெண் பிரஜை பலி!

பாங்காக் குண்டு வெடிப்பு – சிங்கப்பூர் பெண் பிரஜை பலி!

616
0
SHARE
Ad

singaporeபாங்காக், ஆகஸ்ட் 18 – பாங்காக் குண்டு வெடிப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில், சிங்கப்பூர் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாங்காக் குண்டுவெடிப்பு பெரும் கவலை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் சிங்கப்பூர் பிரஜைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 27 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.