Home Featured உலகம் ராஜபக்சே தோல்வி – கனவு கலைந்ததாக ஒப்புதல்!

ராஜபக்சே தோல்வி – கனவு கலைந்ததாக ஒப்புதல்!

591
0
SHARE
Ad

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????கொழும்பு, ஆகஸ்ட் 18 – இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தோல்வியைத் தழுவி வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன. தேர்தல் முடிவுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று மதியமே வெளியாக உள்ள நிலையில், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு, ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், “இலங்கை பிரதமராகும் கனவு கலைந்துபோனது. மொத்தம் உள்ள 22 மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 11 மாவட்டங்களில் வென்றுள்ளது. நாங்கள் (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி) 8 மாவட்டங்களில்தான் வென்றுள்ளோம். இருந்தும் இது சிறப்பான தோல்வி தான். நாங்கள் கடும் போட்டி அளித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 3 மாவட்டங்களில் தமிழ்க் கட்சிகள் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

காலை நிலவரப்படி, ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 41.3 சதவீத வாக்குகளும், ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 40 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தன. இந்நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில், ராஜபக்சே அணி பின்தங்கியதாகக் கூறப்படுகிறது.