Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான 4 பேரின் சடலங்கள் இன்று பினாங்கு கொண்டு வரப்படுகின்றன!

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான 4 பேரின் சடலங்கள் இன்று பினாங்கு கொண்டு வரப்படுகின்றன!

641
0
SHARE
Ad

malaysianபட்டர்வர்த், ஆகஸ்ட் 19 – கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான 4 மலேசியர்களின் சடலங்கள் இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன.

பலியான லீ திஸ் சியாங் (வயது 35), லிம் சா கெக் (வயது 49), நியோ ஜாய் ஜுன்(வயது 20) மற்றும் 4 வயது லீ ஜிங் சுவான் ஆகியோரின் சடலங்கள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி 7.25 மணியளவில், டிஜி425 விமானத்தில் புறப்படுகின்றது.

அந்த விமானம் இன்று இரவு 10.20 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை அடையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்த அதே குடும்பத்தைச் சேர்ந்த நியோ இ லிங் (வயது 33) மற்றும் அவரது தந்தை நியோ ஹாக் குவான் (வயது 55) ஆகிய இருவரும் அந்த விமானத்திலேயே இன்று மலேசியா திரும்புகின்றனர்.

குண்டுவெடிப்பில் மாயமான லிம் சூ யீ (வயது 52) நிலை குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ‘துண்டான கை’ அவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தற்போது அதற்கான மரபணுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.