Home Featured நாடு பாங்காக் குண்டுவெடிப்பு: பலியானவர்களின் சடலங்கள் பினாங்கு கொண்டுவரப்பட்டன!

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியானவர்களின் சடலங்கள் பினாங்கு கொண்டுவரப்பட்டன!

616
0
SHARE
Ad

malaysianஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 20 – பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் நேற்று இரவு 11 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

பிரதமர் துறை அமைச்சர் டத்தோ மா சியூ கியோங், கெராக்கான் மற்றும் மசீச உறுப்பினர்கள் ஆகியோர் பலியானவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அக்குடும்பத்தினரின் நண்பர்களும், உறவினர்களும் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.