Home கலை உலகம் ரஜினிகாந்த்- சரத்குமார் திடீர் சந்திப்பு: ஒரு மணி நேரம் ஆலோசனை!

ரஜினிகாந்த்- சரத்குமார் திடீர் சந்திப்பு: ஒரு மணி நேரம் ஆலோசனை!

540
0
SHARE
Ad

sarath-kumarசென்னை, ஆகஸ்ட் 20- நடிகர் சரத்குமார் நேற்று திடீரென ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

நேற்று முன்தினம் விஷால் அணியினர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, நேற்று சரத்குமாரும் சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகினரிடையே ஒரு விதமான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்து வீட்டில் நடந்த இந்தச் சந்திப்பில் இருவரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கலந்து பேசினர்.

#TamilSchoolmychoice

சந்திப்பிற்குப் பிறகு சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்கத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் கலந்தாலோசிக்க வந்தேன். அப்படியே எங்கள் அணிக்கு ஆதரவும் வேண்டினேன்.

அதுதவிர, அவரது புதுப்படம் கபாலி பற்றியும், அந்தப் படத்திற்காக அவர் மலேசியா செல்வது குறித்தும் பேசினோம்” எனச் சுருக்கமாகக் கூறினார்.

விஷால், சரத்குமார் இருவருமே ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.இதில் யாருக்கு ரஜினி ஆதரவு தரப் போகிறார் என்பது தேர்தலின் போது தான் தெரிய வரும்.