Home Featured வணிகம் ஏர் ஆசியா பயணிகளுக்கு சுவைமிகுந்த புதிய உணவுகள் அறிமுகம்!

ஏர் ஆசியா பயணிகளுக்கு சுவைமிகுந்த புதிய உணவுகள் அறிமுகம்!

847
0
SHARE
Ad

?????????????கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, நம்முடைய நாவின் சுவை மொத்தமாக முடங்கிப் போயிருக்கும். அந்த நேரத்தில் சுடச் சுட பொறித்த கோழி கொடுத்தாலும் அது இரப்பர் போல் தான் சுவை தரும்.

காரணம், அந்த சுவையைத் தீர்மானிப்பது நமது மூளை தான்.அது வெவ்வேறு சூழலுக்கு ஏற்ற மாதிரி நமது உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

ஆனால் ஏர் ஆசியா நிறுவனம் இந்த சவால்களை எல்லாம் கடந்து கடும் உழைப்பிற்குப் பிறகு, பயணிகளின் சுவை நரம்புகளைத் தூண்டும் வகையில்  சில புதிய உணவுகளை பட்டியலில் சேர்த்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தப் புதிய உணவுப் பட்டியலுக்கு ‘சன்தான்’ எனப் பெயரிட்டுள்ள அந்நிறுவனம், உணவுவிடுதியில் சாப்பிடும் பொழுது கிடைக்கும் சுவை அனுபவத்தை அச்சு அசலாக அந்த புதிய உணவுகளின் மூலம் பயணிகளுக்கு அளிக்கவுள்ளது.

?????????????

அந்தப் புதிய உணவுப்பட்டியல் இதோ:

நாசி டாகாங் சிக்கன் கறி (nasi dagang chicken curry), தெரியாகி கிக்கன் ரைஸ் கேக் (teriyaki chicken rice cake), ஸ்மோக்டு சிக்கன் பிட்சா சான்விட்ச் ( smoked chicken pizza sandwich), சிக்கன் சாத்தே ராப் (chicken satay wrap) மற்றும் வெஜிடபிள் பாஸ்தாவுடன் ரோஸ்ட் சிக்கன் (vegetable pasta with roast chicken) ஆகிய ஐந்து சுவையான உணவுகள் ஏர் ஆசியாவின் புதிய உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய உணவுப் பட்டியல் ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் ஆகியவற்றில் தற்போது வழங்கப்படுவதாகவும், ஒட்டுமொத்த ஏர் ஆசியா குழுமத்திற்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய உணவுகளை விமானத்தில் வாங்குவதை விட முன்கூடியே பதிவு செய்பவர்களுக்கு அதன் விலையில் 20% கழிகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விபரங்களுக்கு www.airasia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.