Home Featured நாடு பெர்சேவுக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் பேரணி!

பெர்சேவுக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் பேரணி!

465
0
SHARE
Ad

Anti Bersihகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – பெர்சே 4.0 பேரணிக்கு எதிராக, தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவான குழுவினரும் போட்டிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 4.0 பேரணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே தேதிகளில் போட்டிப் பேரணியை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

அரசு ஆதரவு இயக்கமான (The Himpunan Solidariti Untuk Mu Malaysia), டத்தாரான் மெர்டேக்காவில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இம்முறை மக்களைத் தூண்டும் வகையில் பெர்சே முழக்கம் (சுலோகம்) அமைந்துள்ளது. தங்காப் நஜிப், நஜிப் ரசுவா #TangkapNajib and #NajibRasuah என்ற முழக்கங்களை 2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்துடன் இணைத்து, அதையே பேரணியின் முழக்கமாக்க உள்ளனர் எனில், அது தவறான, பொய்யான முழக்கம்,” என்று அரசு ஆதரவு இயக்கத்தின் தலைவர் சுல்கமைன் மஹ்டார் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு வழங்கப்பட்ட அந்தத் தொகை சட்டத்திற்குட்பட்டு வழங்கப்பட்ட அரசியல் நன்கொடைதான் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், அத்தொகை லஞ்சமாக அளிக்கப்படவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என்றார்.

“1எம்டிபி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தங்காப்நஜிப் #TangkapNajib என்ற முழக்கத்தை நியாயப்படுத்த பெர்சே தரப்பில் என்னென்ன நியாயமான காரணங்கள் உள்ளன?” என்று சுல்கமைன் மஹ்டார் கேள்வி எழுப்பியுள்ளார்.