Home Featured நாடு பினாங்கு மாநில அரசின் மெர்டேக்கா நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளிகளுக்குத் தடை!

பினாங்கு மாநில அரசின் மெர்டேக்கா நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளிகளுக்குத் தடை!

738
0
SHARE
Ad

P. Kamalanathanகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இந்த ஆண்டு மெர்டேக்கா தின கொண்டாட்டங்களுக்கு, ‘பெர்சே’-வைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் செயல், தேச நலனைப் பாதிக்கும் என துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பினாங்கு பள்ளிகள் மாநில அரசாங்கத்தின் மெர்டேக்கா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்காது என அம்மாநில கல்வித்துறை எடுத்துள்ள தீர்மானத்தைத் தற்காத்துப் பேசியுள்ள கமலநாதன், தேசியப் பாதுகாப்பு குழுவின் ஆலோசனையின் படி, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“பினாங்கு மாநில அரசு ‘பெர்சே’ கருப்பொருளை வலியுறுத்துமானால், புலாவ் பினாங்கில் நடக்கும் மாநில மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தில் பள்ளிகள் கலந்து கொள்ளக்கூடாது. காரணம் தேச நலனுக்கு அது முரணாகவுள்ளது என்று தேசியப் பாதுகாப்பு குழு அம்மாநில கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது” என்று கமலநாதன் குறுஞ்செய்தி வாயிலாக மலாய் மெயில் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பினாங்கு அரசாங்கம் பெர்சே கருப்பொருளைத் தவிர்த்து புத்ராஜெயாவின் அசலான கருப்பொருளை மெர்டேக்கா கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்துமானால் இந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றும் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கமலநாதன் தெரிவித்துள்ளார்.