சயீப் அலிகான், கேத்ரீனா கைஃப் நடிப்பில், கபீர் கான் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் வருகின்ற 28-ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், மும்பை தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத், இப்படம் தனது இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதாகக் கூறி, இப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாகப் பதில் கேட்டு பாகிஸ்தான் அரசுக்கு லாகூர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. அதற்குப் பாகிஸ்தான் அரசு, இந்தப் படத்தை வெளியிடும் என்ணம் இல்லை எனப் பதில் தெரிவித்ததால், இப்படத்தைப் பாகிஸ்தானில் வெளியிட லாகூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.