Home இந்தியா அன்புமணி ராமதாஸிற்குக் குடல்வால் அறுவைச் சிகிச்சை!

அன்புமணி ராமதாஸிற்குக் குடல்வால் அறுவைச் சிகிச்சை!

723
0
SHARE
Ad

anbumaniசென்னை, ஆகஸ்ட் 21- முன்னாள் மத்திய சுகாதரத்துறை அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் திடீர் உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடந்து வருவதாகவும் நேற்று மாலை தகவல் வெளியானது.

ஆனால் அப்போது, அவருக்கு என்ன உடல் நலக் குறைவு எனத் தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் அவருக்குக் குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகப் பெங்களூருக்கு அருகிலுள்ள ஓசூருக்குச் சென்றிருந்த போது, அவருக்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், உடனடியாகச் சென்னைக்குத் திரும்பி வந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் குடல்வால் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, டாக்டர் ஆர்.சுரேந்திரன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் அவருக்குக் குடல்வால் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையில் சில நாள்கள் தங்கி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.