இது தொடர்பாக சிஐஎம்பி வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டத்தோ சுலைமானின் பதவி விலகல் விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளது.
சுலைமானின் பதவி விலகல் தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ஆம்பேங் குழுமத்தின் (Ambank Group) முன்னாள் தலைமை நிர்வாகியான அசோக் ராமமூர்த்திக்கு பதிலாக சுலைமான் பணியில் அமர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை சிஐஎம்பி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியான சாஹ்னாஸ் ஜம்மால், நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.