கோலாலம்பூர் – 69வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோலாலம்பூர் கொன்வென்ஷன் சென்டரில், இந்தியத் தூதரகம் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை கடந்த திங்கட்கிழமை ஆகஸ்ட் 17ஆம் தேதி பெரிய அளவில் நடத்தியது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் தலைநகரின் பிரபல இந்தியப் பிரமுகர்களும், அழைக்கப்பட்ட சிறப்பு வருகையாளர்களும் கலந்து கொண்டனர்.
தலைமை விருந்தினராக பிரதமர் துறையின் அமைச்சர் பால் லோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வருகை தரும் துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதனையும், பிரதமர் துறை அமைச்சர் பால் லோவையும், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வரவேற்கின்றார்.
பிபிபி தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் குழுவினருடன் இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி
மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் பல இந்திய நிறுவனங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த சுதந்திர தின விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.