கோத்தாதிங்கி – மலாய் சமுதாயத்தை ஒருங்கிணைக்க அம்னோவால் மட்டுமே இயலும் என ஜோகூர் சுல்தான் கருதுகிறார் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
கோத்தா திங்கி அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“சுல்தானைச் சந்தித்தபோது, ஜோகூரில் உள்ள இஸ்தானா பெசாரில்தான் அம்னோ உதயமானது என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார். சுல்தான் ஒரு அரசியல்வாதியல்ல என்பது எனக்குத் தெரியும். அவர் அரசியலுக்கும் மேலானவர். மலாய்க்காரர்கள் ஒற்றுமையாக இருப்பர் என அவர் நம்புகிறார். அதேசமயம் அம்னோவால் மட்டுமே மலாய்க்காரர்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதும் அவரது நம்பிக்கையாக உள்ளது. இவற்றை சுல்தான் என்னிடம் கூறவில்லை என்றாலும், அவரது நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிந்தது,” என்று ஹமிடி மேலும் தெரிவித்தார்.