கோலாலம்பூர் – வரலாற்றில் இல்லாத அளவிற்கு சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலருக்கு, 0.9 சதவிகிதம் வீழ்ச்சியடைந்த மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.24 ஆகப் பதிவானது. 17 வருடங்களுக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் சந்திக்கும் மிகப் பெரிய வீழ்ச்சி இது எனக் கூறப்படுகின்றது.
கடந்த 1997-ம் ஆண்டு மலேசிய ரிங்கிட் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு தற்போது அதைவிடக் கடுமையாக மலேசிய ரிங்கிட் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகின்றது.
இன்று ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.0049 ரிங்கிட் எனப் பதிவாகி சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.