Home இந்தியா ஆந்திரா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அறிவிப்பு!

ஆந்திரா ரயில் விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அறிவிப்பு!

543
0
SHARE
Ad

train10அனந்தபூர்- ஆந்திராவிலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில்  லெவல் கிராசிங்கில் இன்று அதிகாலை பெங்களூரு நான்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலும் லாரியும் மோதிக் கொண்டதில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் நாயக் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்; 25 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்துத் தகவல் கேட்டறிய உதவி மையத் தொலைபேசி எண்கள் (ஹெல்ப்லைன்) அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு ரயில்வே நிலையம்: 08022354108, 0731666751 மற்றும்  08022156553.

#TamilSchoolmychoice

விபத்து நடந்த இடத்தின் உதவி மைய எண்கள்:  09701374062,09493548005,09448090399 மற்றும் 00873763945549.

இந்த விபத்தால் மத்திய தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில் தடத்தில் செல்லும் சில ரயில்கள் வேறு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.