Home Featured நாடு பெர்சே 4 பேரணிக்கு ஆதரவு கொடுங்கள் – இந்தியர்களுக்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

பெர்சே 4 பேரணிக்கு ஆதரவு கொடுங்கள் – இந்தியர்களுக்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

656
0
SHARE
Ad

hindraf n.ganesanகோலாலம்பூர் – எதிர்வரும் ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணிக்கு, ஹிண்ட்ராப் ஆதரவு தெரிவிப்பதாக அவ்வியக்கத்தின் ஆலோசகர் என்.கணேசன் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒதுக்கப்பட்ட இந்திய சமுதாயம் உயர்மட்டத்தின் ஊழல், அடக்குமுறை மற்றும் முற்றிலும் சுய சேவைக் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இப்போதைய அடிப்படைத் தேவை கொள்கைகளில் மாற்றமே” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர பெர்சே 4.0 பேரணி ஒரு நல்ல வாய்ப்பு என்று தான் நம்புவதாகவும் கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice