Home இந்தியா குஜராத் வன்முறையில் 3 பேர் கொலை : ராணுவம் குவிப்பு!

குஜராத் வன்முறையில் 3 பேர் கொலை : ராணுவம் குவிப்பு!

591
0
SHARE
Ad

தொடரும்-வன்முறை..-முடங்கிய-குஜராத்..-துணை-ராணுவம்-குவிப்புஅகமதாபாத்- குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கே தொடர்ந்து மோசமான நிலை நீடித்து வருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இட ஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல் என்னும் 22 வயது இளைஞர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.பின்பு ஹர்திக் படேல் விடுவிக்கப்பட்டுவிட்ட போதும் வன்முறை தணியவில்லை.

#TamilSchoolmychoice

வன்முறையில் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், ஏராளமான கார், மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதேபோல் 10-க்கும் அதிகமான போலீஸ் சோதனைச் சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

காடி நகரில் நகராட்சி அலுவலக கட்டிடதுக்குள் புகுந்து வன்முறை கும்பல் சூறையாடியது.

சூரத் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 2 பண்டக சாலைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று தீ வைத்துக் கொளுத்தினர்.

இதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஆனால், போராட்டக்காரர்கள் பந்திற்கு அழைப்பு விடுத்துப் போராட்டத்தை நீட்டித்தனர்.

இதனால் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத், சூரத் , ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது.இதனால் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தன. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவம் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயினும், நிலைமை தீவிரமடைந்து வருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி நிலைமையைக் கட்டுக் கோப்புக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்.