Home Featured இந்தியா கொச்சியில் சுற்றுலா படகுடன் மீன்பிடி படகு மோதி விபத்து: 8 பேர் பலி!

கொச்சியில் சுற்றுலா படகுடன் மீன்பிடி படகு மோதி விபத்து: 8 பேர் பலி!

631
0
SHARE
Ad

26-1440582382-kochi-boat-capsize34-600கொச்சி – கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 45 பேருடன் பயணித்த சுற்றுலாப் படகு ஒன்றின் மீது திடீரென மீன்பிடிப் படகு மோதி விபத்திற்குள்ளானதில், சுற்றுலாப் படகு இரண்டாக உடைந்து கவிழ்ந்து, அதிலிருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

நீரில் மூழ்கியவர்களை மற்றவர்கள் மீட்டனர். எனினும், நீரில் மூழ்கி 2 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிழந்தனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மயக்கமான நிலையில் கொச்சி மற்றும் எர்ணாகுளத்திலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.