கோலாலம்பூர் – இவ்வார இறுதியில் நடைபெற உள்ள பெர்சே பேரணியில் பங்கேற்க வருமாறு முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கெராக்கான் ஹராப்பான் பாரு (ஜிஎச்பி) இளைஞர் பிரிவு சார்பில் புதன்கிழமை காலை புக்கிட் டாமான்சாராவில் உள்ள மொய்தீனின் வீட்டில் பேரணிக்கான அழைப்பிதழ் ஒப்படைக்கப்பட்டது.
மொய்தீன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரது வீட்டிலுள்ள தபால் (அஞ்சல்) பெட்டியில் அழைப்பிதழ் போடப்பட்டுள்ளது. வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பேரணியில் டான்ஸ்ரீ மொகிதீன் பங்கேற்பார் என நம்புகிறோம்,” என கெராக்கான் ஹராப்பான் பாரு இளைஞரணித் தலைவர் சானி ஹம்மான் கூறினார்.
அம்னோ தலைவர்களில் மொய்தீனுக்கு மட்டுமே இவ்வாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஜிஎச்பி இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காவல்துறையின் தடையையும் மீறி பெர்சே பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.