Home Featured இந்தியா ஜிசாட்6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: மோடி பாராட்டு!

ஜிசாட்6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: மோடி பாராட்டு!

670
0
SHARE
Ad

20-1440017334-18-1418876681-gslv-mark3-11ஸ்ரீஹரிகோட்டோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தொடர்பிற்காகவும், காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவும், ‘எஸ்.பேண்ட்’ தொலைத்தொடர்பிற்குப் பயன்படும் வகையிலும் ‘ஜி சாட்6’ என்ற செயற்கைக் கோளை வடிவமைத்திருந்தது.

இந்தச் செயற்கைக்கோளைச் சுமந்தபடி  ‘ஜி.எஸ்.எல்.வி டி6’ ராக்கெட் இன்று  மாலை 4.52 மணிக்கு விண்ணில்  சீறிப் பாய்ந்து சென்றது.

விண்ணில் செலுத்தப்பட்ட  17 நிமிடம் 4 விநாடிகளில் ராக்கெட்டில் இருந்து ‘ஜி சாட்6’ செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து பிரிந்து சென்று வெற்றிகரமாகத் தற்காலிகச் சுற்றுவட்டப்பாதையில்  நிலைநிறுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த வெற்றிக்காகப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

“ஜிசாட்-6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றொரு வியக்கத்தக்க சாதனையைப் புரிந்துள்ளனர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.