Home Featured உலகம் நான் ஏன் இதைச் செய்தேன்? – சாகும் தருவாயில் விர்ஜினியா கொலையாளி கதறல்!

நான் ஏன் இதைச் செய்தேன்? – சாகும் தருவாயில் விர்ஜினியா கொலையாளி கதறல்!

730
0
SHARE
Ad

AdamWardவிர்ஜினியா – அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், இன்று காலை டபிள்யூடிபிஜே (WDBJ) என்ற தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின் போது அலிசன் பார்க்கர்(24) என்ற பெண் செய்தியாளரும், ஆடம் வார்ட்(27) என்ற ஒளிப்பதிவாளரும் மர்ம மனிதன் ஒருவனால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். நேரலையின் போதே நடந்த இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்ததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

Gunman-Bryceவெஸ்பரின் லீ ஃபிளானகன் (படம்) என்ற அந்த மனிதன், அவர்கள் இருவரையும் கொலை செய்த பிறகு, ப்ரைஸ் வில்லியம்ஸ் என்ற பெயரில் இருக்கும் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் கொலைக்கான காரணத்தையும், அவர்களை சுடும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளான். இதை பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளான். எனினும், அவனை உடனடியாக மீட்ட காவல்துறையினர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தான்.

கறுப்பினத்தைச் சேர்ந்த அவன், கடுமையான இனவெறித் தாக்குதல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானதால் தான், இத்தகைய கொடூர செயலைச் செய்ய துணிந்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளது. கொலையாளியும், டபிள்யூடிபிஜே தொலைக்காட்சியில் தான் பணியாற்றி வந்துள்ளான். கொலை செய்யப்பட்ட அலிசன் பார்க்கர், ஃபிளானகனிடம் பலமுறை இனவெறியை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார். மேலும், ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட், ஃபிளானகன் பற்றி மனிதவள துறையில் புகார் அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரின் செயல்கள், கொலையாளிக்கு நீண்ட நாட்களாகவே கோபத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இவை எல்லாவற்றையும் விட, கடந்த ஜூன் 17-ம் தேதி, தெற்கு கரோலினாவில் உள்ள சார்லஸ்டன் தேவாலயத்தில் 9 கறுப்பினத்தவர்களை சுட்டுக் கொன்ற டைலான் ரூஃப் (வெள்ளையர்)-ன் கொடூர செயல் தான், வெஸ்பரின் லீ ஃபிளானகனை ஆயுதம் ஏந்த வைத்திருக்கிறது.

twitterஇந்த சம்பவம் குறித்து கொலையாளி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் ஏன் இதைச் செய்தேன்? ஜூன் 17-ம் தேதி, சார்லஸ்டன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு, 19-ம் தேதியே துப்பாக்கி வாங்குவதற்கான பணத்தை சேமித்து வைத்துவிட்டேன். டைலான் ரூஃப் இதைத் தான் எதிர்பார்த்தான். இனப்போரை தானே நீங்களும் எதிர்பார்த்தீர்கள்? வெள்ளை இனத்தவர்களே, இப்போது வாருங்கள்” என்று அவன் குறிப்பிட்டுள்ளான்.

virjinia1அமெரிக்காவில், சமீப காலமாக தொடர்ச்சியாக கறுப்பினத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கொடுமைப்படுத்தப்படுவதும், சில சமயங்களில் கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. துப்பாக்கிக் கலாச்சாரம் சர்வ சாதாரணமாகி விட்டதாக, அதிபர் ஒபாமாவே ஒப்புக் கொண்டுள்ளார்.

கொலையாளியின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டாக்களின் சத்தம், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் ஓங்கி ஒலிக்கும் குரலாகவே தெரிகிறது. அண்டை நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து, தலைவனாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, உள்நாட்டில் நிலவும் இனப் பிரச்னைக்கு என்று முடிவு கட்டுமோ அதுவரை, டைலான் ரூஃப் மற்றும் ஃபிளானகன் போன்றவர்கள் சுட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.