Home கலை உலகம் 5 வருடம் கழித்து ஐஸ்வர்யாராய் நடிக்கும் ‘ஜஸ்பா’: முன்னோட்டம் வெளியீடு!

5 வருடம் கழித்து ஐஸ்வர்யாராய் நடிக்கும் ‘ஜஸ்பா’: முன்னோட்டம் வெளியீடு!

602
0
SHARE
Ad

asமும்பை – ஐஸ்வர்யா ராய் ஏறக்குறைய 5 ஆண்டுகள் கழித்து நடித்திருக்கும் இந்திப் படம் ‘ஜஸ்பா’. இந்தப் படம் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகிறது.

ஜஸ்பா படத்தின் முன்னோட்டக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

சஞ்சய் குப்தா இயக்கிய இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தப் படத்தில் நடிகர் இர்பான் கான் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியாகவும், நடிகை ஷபானா ஆஸ்மி பள்ளிக்கூட ஆசிரியையாகவும் நடித்திருக்கிறார்கள்.

மீண்டும் நடிக்க வந்திருப்பது குறித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது:

“நான் 5 வருடங்களாகப் படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும், சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டதாக உணரவில்லை.

நடிகர், நடிகையாக இருப்பவர்களுக்குத் தங்கள் வேலையில் திருப்தி ஏற்படவேண்டும். அது ரொம்ப முக்கியம். திருமணத்துக்கு முன்பும் சரி; இப்போதும் சரி. எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வோடுதான் எனது கடமையைச் செய்கிறேன்.

எனக்கேற்ற கதைக்காகக் காத்திருந்தேன். அந்தக் கதை இப்போது அமைந்திருக்கிறது. அதனால் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.