Home இந்தியா லண்டனில் அம்பேத்கார் வசித்த வீட்டை விலைக்கு வாங்கியது இந்தியா!

லண்டனில் அம்பேத்கார் வசித்த வீட்டை விலைக்கு வாங்கியது இந்தியா!

535
0
SHARE
Ad

amலண்டன் – லண்டனில் இந்தியச் சட்டமேதை அம்பேத்கார் வசித்த வீட்டை இந்தியா விலைக்கு வாங்கியுள்ளது.

தாழ்ந்த குலத்தில் பிறந்ததாகப் பிற சமூகத்தினர் அவரை ஒதுக்கித் தள்ளிய போது, பிராமணராகிய அவரது ஆசிரியர் அம்பேத்கார் அவரை ஆதரித்து அரவணைத்துத் தன்னால் முடிந்த பொருளுதவியும் செய்து வாழ்க்கையில் முன்னேற அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அதனால், தன்னுடைய இயற்பெயரான பீமாராவ் என்பதை மாற்றித் தனது ஆசிரியரின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டார்.

#TamilSchoolmychoice

தன்னுடைய தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் பல அவமானங்களைக் கடந்து பல பட்டங்கள் பெற்று உயர்ந்து, சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் சட்டத்தையே வடிவமைக்கும் மாமேதையானார் அம்பேத்கார்.

அப்படிப்பட்ட சட்டமேதை அம்பேத்கார், 1921 மற்றும் 1922–ஆம் ஆண்டில் லண்டனில் ஆராய்ச்சிப் படிப்புப் படித்தபோது எண் 10, கிங் ஹென்றி ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அது 2 ஆயிரத்து 50 சதுர அடியில் அமைந்த 3 மாடிகள் கொண்ட பங்களா வீடாகும்.

அந்த வீட்டின் உரிமையாளர் கடந்த ஆண்டு அதை விற்க முயற்சி எடுத்து வருவதை அறிந்த மராட்டிய மாநில அரசு, அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது நினைவாக அந்த வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தது.

விற்பனைத் தொகையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. தற்போது ஒருவழியாய்ப் பேச்சு வர்த்தை முடிந்து, வீட்டு உரிமையாளரும், மராட்டிய மாநில சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அம்பேத்கார் வசித்த அந்த வீடு, சர்வதேச நினைவகமாக மாற்றப்பட்டு, கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள அம்பேத்கார் மற்றும் புத்தமத இயக்கங்களின் கூட்டமைப்புத்  தலைவர் சந்தோஷ் தாஸ் கூறியுள்ளார்.