Home இந்தியா இந்தியா முழுவதும் ‘ரக்சா பந்தன்’ கொண்டாட்டம்: மோடி, பிரணாப் முகர்ஜி வாழ்த்து!

இந்தியா முழுவதும் ‘ரக்சா பந்தன்’ கொண்டாட்டம்: மோடி, பிரணாப் முகர்ஜி வாழ்த்து!

830
0
SHARE
Ad

10rakhi1புதுடில்லி – இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தின் போது ஒருவருக்கொருவர் கையில் விதவிதமான ராக்கிக் கயிறுகளைக் கட்டித் தங்களது சகோதரப் பாசத்தை வெளிப்படுத்துவர்.

ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடும் மக்களுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ராக்கி கயிறு சகோதர சகோதரிகளுக்கிடையே உள்ள அன்பையும் நம்பிக்கையையும் பிணைப்பதாகும். பெண்களின் நலன் காக்கும் முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்பதையே இந்த விழா நமக்கு உணர்த்துகிறது.

இந்த நன்னாளில் இந்தியப் பெண்களின் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் நலனுக்காக நம்மை அர்ப்பணிக்க உறுதி மொழி ஏற்போம்.” என அவர் தம் வாழத்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதே போல் பிரதமர் நரேந்திர மோடியும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு மக்களுக்குத் தம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“சகோதரத்துவத்துக்கிடையில் அன்பையும் கடமையையும் உணர்த்தும் இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கையில் ராக்கி கட்டி நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அவர்கள் பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், இவ்விழாவினையொட்டி இன்று ஒருநாள் மட்டும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று உத்திரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்தும், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அறிவித்துள்ளனர்.