Home Featured உலகம் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் – கருணா பரபரப்பு தகவல்!

பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் – கருணா பரபரப்பு தகவல்!

1445
0
SHARE
Ad
prabakaran-tamil tigersகொழும்பு-  இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தாம் கருதுவதாக அந்த இயக்கத்தின் முன்னாள் தளபதியும், இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா என்கிற முரளிதரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிரபாகரன் தனது முன் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.
karuna_amman_002கருணா (படம்) அளித்த பேட்டியின் சில முக்கிய சாராம்சங்கள் வருமாறு:-
“பிரபாகரனால் வளர்க்கப்பட்ட போராளி நான். அவர் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டு அதன்பின்னர் இறந்திருக்க மாட்டார் என உறுதியாகச் சொல்வேன். மாறாக அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்திருக்க வேண்டும் என்பதே என் கணிப்பு.
பிரபாகரனின் மனைவியும் மகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ராணுவத்தின் தாக்குதலில் குண்டு காயம் ஏற்பட்டே அவர்கள் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இறக்கவில்லை எனக் கூறப்படுவது உண்மை அல்ல. இருவரின் சடலத்தையும் பார்த்தவர்கள் என்னிடம் அவர்களது இறப்பை உறுதி செய்துள்ளனர். பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட விதம் கொடூரமானது. இதற்கு கண்டிப்பாக ராஜபக்சே பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் தவறான போர் யுக்திகளாலேயே தோல்வி கண்டனர்”