கோலாலம்பூர் – “ஊடகங்கள், பெர்சேவிற்கு ஆதரவாக 20,000 பேர் திரண்டு வந்து பேரணி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளன. அப்படியானால், அந்த 20,000 பேரைத் தவிர மற்ற மலேசியர்கள் என்னுடன் இருக்கின்றனர் என்று தானே அர்த்தம்” என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய பெர்சே பேரணியில் 20,000 பேர் கலந்து கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படியானால், அந்த 20,000 பேர் மட்டுமே என் மீது அதிருப்தியில் இருக்கின்றனர். ஏனைய மலேசியர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பெர்சே ஒருங்கிணைப்பாளர்கள், பேரணியில் சுமார் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.