Home Featured நாடு “சிறைக்குச் செல்ல நேரிடும் என நஜிப் அஞ்சுகிறார்” – மகாதீர் கருத்து

“சிறைக்குச் செல்ல நேரிடும் என நஜிப் அஞ்சுகிறார்” – மகாதீர் கருத்து

597
0
SHARE
Ad

bersih1கோலாலம்பூர் – பெர்சே பேரணியில் இன்று இரண்டாவது முறையாக கலந்து கொண்ட மகாதீர், நஜிப்பை கடுமையாக விமர்சித்தார்.

நஜிப் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நஜிப் பதவி விலக மாட்டார். காரணம் அவருக்குத் தெரியும் தனக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. நீதிமன்றத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டால், தனது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிடும். சிறைக்குச் செல்ல வேண்டி வரும் என்று அவர் அஞ்சுகிறார்.”

“அவர் பதவி விலகவில்லை என்றால் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். அது வெற்றியடையும் பட்சத்தில் இந்த அரசாங்கம் வீழ்ச்சியடையும். ஆனால் மீண்டும் தேசிய முன்னணி தான் ஆட்சியில் அமரும். காரணம் அது தான் இன்னும் பெரும்பான்மையில் உள்ளது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.