Home Featured நாடு தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் வாக்குகள் கிடையாது – சாஹிட்டுக்கு வேதா பதிலடி

தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் வாக்குகள் கிடையாது – சாஹிட்டுக்கு வேதா பதிலடி

497
0
SHARE
Ad

waytha,கோலாலம்பூர் – அடுத்த பொதுத்தேர்தலில் இந்தியர்களும், சீனர்களும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க, துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடி ஊடகங்களின் உதவியை நாடியிருப்பதை முன்னாள் செனட்டரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

எந்த ஒரு நம்பகத்தன்மையும் இல்லாத ஒருவரின் தலைமையில் செயல்படும் ஆளும்கட்சிக்கு, எதன் அடிப்படையில் இந்தியர்களை வாக்களிக்கும் படி சாஹிட் கேட்கிறார்? என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தேசிய முன்னணிக்கு வாக்களிக்க இந்தியர்களுக்கு எந்த ஒரு காரணமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ள வேதமூர்த்தி, கடந்த பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராஃப் உடன், தேசிய முன்னணி செய்த ஒப்பந்தத்தில் எதையும் செயல்படுத்தவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

மொத்தத்தில், நஜிப் தலைமையிலான அரசாங்கம் நம்பகத்தன்மையற்றது என்றும் வேதமூர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.