Home Featured நாடு “எந்த கணக்குகளும் முடக்கப்படவில்லை” – 1எம்டிபி விளக்கம்!

“எந்த கணக்குகளும் முடக்கப்படவில்லை” – 1எம்டிபி விளக்கம்!

554
0
SHARE
Ad

1mdb3கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளை தாங்கள் முடக்கி உள்ளதாகத் சுவிட்சர்லாந்து அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரிகள் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அப்படி எந்தவொரு கணக்குகளும் முடக்கப்படவில்லை என 1எம்டிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 1எம்டிபி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிறுவனத்தின் எந்தவொரு சுவிஸ் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுவிஸ் அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் தேவையான ஒத்துழைப்பும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த, 1எம்டிபி நிர்வாகம் முயற்சி செய்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.