Home கலை உலகம் நாளை முதல் எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

நாளை முதல் எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாது: தயாரிப்பாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு!

634
0
SHARE
Ad

thaanu_2289456f_2532883fசென்னை – லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டாமல் வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள விஷாலின் பாயும் புலி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் முரண்டு பிடித்து வருகிறார்கள்.

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இத்தகைய அடாவடித்தனத்தை எதிர்த்துத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்தத் தமிழ்த் திரைப்படமும் வெளியாகாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்துத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘கோயம்பேட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து தமிழ்ச் சினிமாவை அழிக்கும் வேலை செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாகப் ‘பாயும்புலி’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்துச் செய்து வருகிறார்.

தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும், அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார்.

இதனைக் கண்டிக்கும் வகையிலும், இதற்குத் தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04.09.2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்டுத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆக, நாளை வெளியாக உள்ள பாயும்புலி,சவாலே சமாளி, போக்கிரி மன்னன் ஆகிய படங்கள் வெளியாவது சந்தேகமே!