Home கலை உலகம் ஜீவா- ஹன்சிகா நடிக்கும் புதுப்படத் தலைப்பு ‘போக்கிரி ராஜா’ : ரஜினி சம்மதம்!

ஜீவா- ஹன்சிகா நடிக்கும் புதுப்படத் தலைப்பு ‘போக்கிரி ராஜா’ : ரஜினி சம்மதம்!

629
0
SHARE
Ad

jeeva-1728x800_cசென்னை – ரஜினிகாந்தின் அனுமதியுடன் ஜீவா – ஹன்சிகா நடிக்கும் புதிய படத்திற்குப் ‘போக்கிரி ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜீவாவுடன்  இன்னொரு கதாநாயகனாகச் சிபியும் நடிக்கிறார். ராம்பிரகாஷ் என்னும் புதியவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் புதுச்சேரியில் தொடங்கவிருக்கிறது.

சமீபகாலமாக ரஜினிகாந்தின் பழைய படப் பெயர்களைத் தங்களது படங்களுக்கு வைக்க, கதாநாயகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அவ்வகையில்,அஜீத் படத்திற்குப் பில்லா, தனுஷ் படத்திற்குப் பொல்லாதவன் – மாப்பிள்ளை, கார்த்தி படத்திற்கு நான் மகான்  அல்ல, சுந்தர். சி படத்திற்கு முரட்டுக்காளை எனப் பெயர் வைக்கப்பட்டன.

தற்போது விஷால் நடிக்கும் படத்திற்கு ரஜினியின் ‘பாயும்புலி’ என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜீவாவும் தனது படத்திற்கு ரஜினியின் ‘போக்கிரி ராஜா’ தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

‘போக்கிரிராஜா’ படம் ஏ.வி. எம். தயாரிப்பில் ரஜினிகாந்தும் ஸ்ரீதேவியும்  ஜோடியாக நடித்து 1982-ல் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும்.

இந்தத் தலைப்பைப் பயன்படுத்த அனுமதி கேட்டு ஜீவா உள்ளிட்ட படக் குழுவினர் ரஜினிகாந்தையும், ஏ.வி.எம். நிறுவனத்தையும் அணுகியதாகவும், ரஜினிகாந்தும் ஏ.வி. எம்.சரவணனும் அதற்கு மனப்பூர்வமாகச் சம்மதம் தந்ததாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.