Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல் தேதி 3 நாளில் அறிவிக்கப்படும்: தேர்தல் பொறுப்பாளர்!

நடிகர் சங்கத் தேர்தல் தேதி 3 நாளில் அறிவிக்கப்படும்: தேர்தல் பொறுப்பாளர்!

522
0
SHARE
Ad

vishal-sarathசென்னை – நடிகர் சங்கத் தேர்தல் தேதி இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினரிடம் நீதிபதி பத்மநாபன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்ட பின் செய்தியாளர்களிடம் பத்மநாபன் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “எங்களது முயற்சியால் நடிகர் சங்கத்தில் 460 போலி உறுப்பினர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலுக்கு எதிராக இனி வழக்குத் தொடர மாட்டோம். தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.தேர்தல் அறிவிக்கப்படும் தேதியில் பங்கேற்போம்” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice