சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் உயிர் தப்பி ஐரோப்பாவுக்கு அகதியாக இடம்பெயர முயன்ற போது, படகு விபத்தில் சிக்கிக் கடலில் மூச்சுத் திணறிப் பலியான ஒரு கைக் குழந்தையின் உடல், துருக்கி எல்லை அருகே கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிக் கிடந்தது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரிலிருந்து உயிர் தப்பிக்க, அந்நாட்டு மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கிறார்கள், அப்படிச் செல்லும் போது படகு கடலில் மூழ்கிப் பலர் பலியாகிறார்கள்.
அப்படி உயிருக்குப் பயந்து ஓடி உயிரை இழக்கும் இப்படிப்பட்ட அகதிகளின் உயிரை ஐரோப்பிய நாடுகள் துச்சமாக எண்ணுகின்றன.அவர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்தக் குழந்தையின் மனதை உலுக்கும் மரணத்தைக் கண்ட பிறகாவது ஐரோப்பிய நாடுகள் மனமிறங்குமா?