Home இந்தியா சரவணா ஸ்டோர்ஸ் யோகரத்னம் மறைவு:முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி

சரவணா ஸ்டோர்ஸ் யோகரத்னம் மறைவு:முக்கியப் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி

664
0
SHARE
Ad

saravanaசென்னை – உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் எஸ்.யோகரத்தினம் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

யோக ரத்னத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பு ஆகும். இவர் 1969-ஆம் ஆண்டு சென்னை ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர் கடையைத் தொடங்கினார்.

இவர்களது சகோதரர்கள் ராஜரத்னம், நவரத்னம், செல்வரத்னம் ஆகியோரின் அயராத உழைப்பினால் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சென்னையில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியது.

#TamilSchoolmychoice

76 வயதான யோகரத்தினம் மறைவிற்கு ஆர்.சரத்குமார், தமிழிசை செளந்திரராஜன், முன்னாள் மத்திய மந்திரி ராதிகா செல்வி முதலிய முக்கியப் பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் வணிகப் பேரவையினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தியாகராய நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு யோக ரத்னம் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.