Home இந்தியா அதிமுகவுக்கு தேர்தலில் கிடைக்கப் போகும் பரிசு பட்டை நாமம்: விஜயகாந்த் கிண்டல்

அதிமுகவுக்கு தேர்தலில் கிடைக்கப் போகும் பரிசு பட்டை நாமம்: விஜயகாந்த் கிண்டல்

610
0
SHARE
Ad

சென்னை- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அப்பகுதி ஏழை மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுகவுக்கு பட்டை நாமம்தான் பரிசாகக் கிடைக்கப் போகிறது என்றார்.

vijayakanth-jaya_110304மேலும் பேசிய அவர், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை நம்பி தமிழக மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றார்.

#TamilSchoolmychoice

“ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து, நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இப்போதுதான் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப் போவதாக அறிவித்திருக்கிறார். தேர்தலை மனதில் வைத்து, இப்படியொரு அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார். எனவே யாரும் ஏமாற வேண்டாம். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவால் 110ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்படும், எந்தத் திட்டங்களும் நடைமுறைக்கு வருவதில்லை. அதிமுக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை” என்று விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

காய்கறி வாங்குவதில் அக்கறை காட்டும் தமிழகப் பெண்கள், நாட்டை ஆள்கிறவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று மட்டும் நினைப்பதில்லை என்று விஜயகாந்த் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.