Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

541
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512

  • கோலாலம்பூர்: அதிகாலை தீ விபத்தில் ஸ்தாப்பாக் பகுதியிலுள்ள புத்தர் ஆலயத்தின் மூன்று பெண் பிக்குகள் உடல் கருகி மரணம்!
  • கோலாலம்பூர்: “அவசர நாடாளுமன்றக் கூட்டம் கூட்டி, 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்த விளக்கம் நஜிப் தரவேண்டும்” – வான் அசிசா வலியுறுத்து
  • ஹிலிர் பேராக்: இங்கு கம்போங் சுங்கை சாமாக் பகுதியில் காணாமல் போன அரசாங்க வழக்கறிஞரின் கார் முழுவதுமாக எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது – மர்மம் தொடர்கின்றது!
  • கோலாலம்பூர்: மலேசியா தினம் செப்டம்பர் 16இல் பெர்சேக்குப் போட்டியாக அம்னோவினர் பேரணி!
  • கோலாலம்பூர்: 10-0 கோல் கணக்கில் காற்பந்தில் தோல்வியுற்ற மலேசியக் குழுவின் பயிற்சியாளர் டோல்லா சாலே ராஜினாமா
  • கோலாலம்பூர்: “செப்டம்பர் 9இல் அம்னோவிலிருந்து விலக்கப்படுவேனா? முடிவை கட்சித் தலைமைத்துவத்திடமே விட்டு விடுகின்றேன்” – முக்ரிஸ் மகாதீர்!
  • கோலாலம்பூர்: “எதை நிரூபிக்கப் போராடுகிறீர்கள்?” சிவப்பு ஆடை அம்னோ தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் சாடல்!
  • அலோர்காஜா: பெர்சே பேரணியில் பதாகைகளை காலால் மிதித்த செயல்கள் மீது இதுவரை 267 புகார்கள் காவல் துறையில் செய்யப்பட்டுள்ளன – சாஹிட் ஹாமிடி தகவல்!