Home இந்தியா திமுக தனிமைப்படுத்தப்படுகிறது – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

திமுக தனிமைப்படுத்தப்படுகிறது – அரசியல் விமர்சகர்கள் கருத்து!

559
0
SHARE
Ad

karunanidhiசென்னை – விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதாக சுப்ரமணிய சுவாமி கொளுத்திப் போட, மற்ற கட்சிகளை விடவும் திமுக தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக்கூட்டியக்கம் என கூறிக் கொண்டிருக்க, திமுக தரப்பு ஓரளவு நம்பி இருந்தது காங்கிரசையும், தேமுதிக-வையும் தான்.

ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைதானது முதல், அவரை கடுமையாக விமர்சித்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக-வை மட்டும் கருணைப் பார்வை பார்த்து வந்தார். எக்காரணத்தைக் கொண்டும் கூட்டங்களில் திமுகவை விமர்சிக்கக் கூடாது என கொள்கைகையாகவே கொண்டிருந்ததால், திமுகவும் எப்படியும் விஜயகாந்த் வந்துவிடுவார் என பலமாக நம்பி வந்தது.

jayaஅந்த நம்பிக்கையை தகர்த்தெறியும் வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அதிமுக-திமுக கட்சிகளுக்கு மாற்று தேமுதிக தான். இவர்கள் இருவருடனும் கூட்டணி இல்லை என்று கூறி முதல் அதிர்ச்சி அளித்தார். அதனை ஒப்புக் கொள்ளும் விதமாக விஜயகாந்த்தும் திமுகவினரின் மது ஆலைகள் பற்றி விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான்,  விஜயகாந்த்-சுப்ரமணிய சுவாமி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

பாமாக ஆரம்பம் முதலே தனித்து போட்டி என அறிவித்து விட்டநிலையில், மக்கள் நலக்கூட்டியக்கம் என கூறிகொள்ளும் 5 சிறிய  கட்சிகளும் திமுக-அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டன. இந்த கட்சிகளின் முடிவு அதிமுக தலைமைக்கு மகிழ்ச்சியை அளித்து இருந்தாலும், விஜயகாந்த், திமுக பக்கம் சாய்ந்துவிடுவார் என்ற பதற்றம் நிலவாமல் இல்லை. இந்நிலையில், தேமுதிகவும், திமுக-வுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டதால், தற்போது நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

vijayakanth-swamyஇது கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் வாக்குகளை விஜயகாந்த் அமைக்க இருக்கும் கூட்டணி வலுவாக பிரித்துவிடும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் திமுக தனிமைப்படுத்தப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. ஒருவேளை, இது நடந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற திமுக-வின் கனவு பலிக்காமல் போய்விடும்.

இதற்கிடையே, தற்போது நிலவும் சூழல் தேர்தல் வரை இருக்காது என்றும் கூறப்படுகிறது. தேர்தல் சமயத்தில், ஆளுங்கட்சியின் ஊழல் ஆட்சியை போக்க நாங்கள் கைகோர்த்துள்ளோம் என மற்ற கட்சிகள் கூறுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியாயினும், தமிழகம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தேர்தலுக்கு தயாராகி வருகிறது.