Home உலகம் குடிபோதையில் கைவிட்ட தாய் – பசித்த சிறுவனுக்கு பாலூட்டிய வளர்ப்பு நாய்!

குடிபோதையில் கைவிட்ட தாய் – பசித்த சிறுவனுக்கு பாலூட்டிய வளர்ப்பு நாய்!

694
0
SHARE
Ad

dog (1)அரிகா – பெற்ற தாய் குடிபோதையில் இருக்க, வளர்ப்பு நாயிடம் 2 வயது சிறுவன் ஒருவன் பால் குடித்துள்ள சம்பவம் சிலி நாட்டில் அரங்கேறி உள்ளது. பசிக் கொடுமையில் சிறுவனை கைவிட்ட தாயை தூற்றுவதா? அவன் பசியை தீர்த்த நாயை போற்றுவதா? என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிலியின் வட பகுதியில் இருக்கும் நகரமான அரிகாவில், காவல்நிலையம் ஒன்றிற்கு சமீபத்தில் ஒரு பெண், அந்த சிறுவன் குறித்து தகவல் தெரிவித்த போது தான், இந்த சம்பவம் குறித்து வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. வறுமையில் சிக்கித் தவித்த அந்த சிறுவனின் பெற்றோர்கள், அவனை வாகனங்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் விட்டு சென்றுள்ளனர்.

chidபசிக் கொடுமையால் சிறுவன் வாடி இருக்க, தாய் மது போதையில் திளைத்திருக்கிறாள். சிறுவனுக்கு வேறு வழி தெரியாததால், அவன் அருகில் படித்திருந்த பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயிடம் பால் குடித்துள்ளான். பெற்ற தாய் உணராத தாய்மையை நாய் உணர்ந்ததா? என்று தெரியவில்லை.  தன்னிடம் பால் குடிக்கும், அச்சிறுவனை நாய் ஒன்றும் செய்யவில்லை. இந்த காட்சியை பார்த்த நாயின் உரிமையாளர் தான், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தகவல் அறிந்து உடனடியாக வந்த காவல்துறை, ஊட்டுச்சத்து குறைப்பாடினாலும், கடுமையான பசியிலும் வாடிய அந்த சிறுவனை மீட்டு காப்பகத்தில் அனுமதித்துள்ளது. மேலும், குடிபோதையில் சிறுவனை கைவிட்ட தாயையும் காவல்துறை காப்பகத்தில் அனுமதித்து மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

“ஒரு தாயாக இந்த காட்சியை பார்த்த நான் பெரும் துயரமடைந்தேன்” என்று அந்த நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.