Home உலகம் செனிகலில் மருத்துவ அவசர உதவி விமானம் மாயம்!

செனிகலில் மருத்துவ அவசர உதவி விமானம் மாயம்!

623
0
SHARE
Ad

planeதக்கார் – ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனிகலின் மேற்குப் பகுதியில், ‘மெடிவேக்’ (Medevac) எனப்படும் மருத்துவ அவசர உதவி விமானம் மாயமானதாகத் தகவல்கள் வந்துள்ளன. அந்த விமானத்தில், பிரான்சை சேர்ந்த நோயாளி ஒருவர் உட்பட 7 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

செனிகலின் தலைநகரான, தக்காரில் இருந்து மற்றொரு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவிற்கு நேற்று மாலை பயணமான விமானத்திடமிருந்து தற்போது வரை எந்தவொரு சமிக்ஞைகளும் வரவில்லை என செனிகல் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.