Home Featured நாடு 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்து ஜோகூர் அம்னோ உறுப்பினர் காவல் துறையில் புகார்!

2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்து ஜோகூர் அம்னோ உறுப்பினர் காவல் துறையில் புகார்!

563
0
SHARE
Ad

Najib 1MDBஜோகூர் பாரு – ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த உறுப்பினர் அப்துல் ரஷிட் ஜமாலுடின், நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை குறித்தும், 1எம்டிபி விவகாரம் குறித்தும் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என பாசீர் கூடாங் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

1எம்டிபி நிறுவன வாரியத் தலைவர் டான்ஸ்ரீ லோடின் வோக் கமாருடின் மற்றும்  நிர்வாகத் தலைவர் அருள் கந்தா ஆகியோரையும் அந்தப் புகாரில் அப்துல் ரஷிட் ஜமாலுடின் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

1எம்டிபி நிறுவனத்தின் ஆலோசனை வாரியத் தலைவரும் பிரதமருமான நஜிப் துன் ரசாக்கையும் விசாரிக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஐந்து அமைச்சர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, 1எம்டிபி விவகாரம் குறித்து அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் அவர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் செய்யப்பட்ட புகாரின் நகலை வெளியிட்டு, இந்தத் தகவலையும், மலேசியன் இன்சைடர் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, கெடா மாநிலத்தின் அம்னோ மகளிர் உறுப்பினரான அனினா சவுடின் நஜிப் மீது இதே விவகாரம் குறித்து, வழக்கு தொடுத்துள்ளார்.