Home இந்தியா திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை: திருமாவளவன்!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை: திருமாவளவன்!

682
0
SHARE
Ad

1441649868-8737சென்னை- திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும், மனித நேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்  மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில்,ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை என்பதை வலியுறுத்தித் திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் நாளை உண்ணாவிரதம் நடைபெறும் என அவர்கள் அறிவித்தனர்.

அவர்கள் அமைத்துள்ள மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் மற்ற கட்சிகளைச் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் சமயத்தில் கூட்டணி அறிவித்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இக்கூட்டு இயக்கத்தில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனும், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் ஒருமித்த குரலில், “இப்போது நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை; வெளியேறி விட்டோம்” என்று  தெரிவித்தனர்.

திமுக-வின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “திமுக 170 இடங்களில் போட்டியிடும்.இனி திமுகவில் சாதிக்கட்சிகளுக்கு இடமில்லை” என்று பகிரங்கமாகப் பேட்டியளித்திருந்தார்.

இதைக் கண்டு கோபம் கொண்ட கருணாநிதி, அவரது கருத்திற்கும் திமுகவிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லியிருந்தார்.இருந்தாலும், அந்த வருத்தத்திலேயே திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும் வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது.