Home கலை உலகம் சந்திக்கு வந்து விட்டது ‘இது நம்ம ஆளு’ படப் பிரச்சினை!

சந்திக்கு வந்து விட்டது ‘இது நம்ம ஆளு’ படப் பிரச்சினை!

700
0
SHARE
Ad

nayan-simbu-7சென்னை – சிம்பு படம் என்றாலே வம்பு பிடித்த படம் என்று ஆகிவிட்டது. வாலு படப் பிரச்சினை ஓய்ந்து படமும் வெளியாகி, ஓரளவு வெற்றியும் பெற்று விட்டது.

அடுத்து இப்போது “இது நம்ம ஆளு’ படப் பிரச்சினை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இது நம்ம ஆளு படம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் படம் முடியவில்லை. இன்னும் இரண்டு பாடல் பாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

#TamilSchoolmychoice

வாலு படம் சுமாராக ஓடியதால், இது நம்ம ஆளு படத்தையும் அதே சூட்டோடு முடித்து வெளியிட்டு விடலாமென்று அதன் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் முயற்சி எடுத்தார். பாக்கியிருக்கும் பாடல் இரண்டின் படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்று நயன்தாராவிடம் தேதி கேட்டார்.

அவர், ஏற்கனவே பல நாள் தேதி கொடுத்து வீணாகிவிட்டது.அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

இதனால் அவர் நயன் தாரா மீது தயாரிப்பாளர்சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார் தெரிவித்தார்.இதற்கு நயன்தாரா, நியாயப்படி பார்த்தால் நான் தான் எனது தேதிகளை வீணாக்கியதற்கு டி.ராஜேந்தர் மீது புகார் தர வேண்டும் என்று பதிலடி கொடுத்தார்.

இந்தப் பிரச்சினையை அடுத்து இப்போது அந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜிற்கும், இசையமைப்பாளரும் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

“இது நம்ம ஆளு” படத்தைப் பொருத்த வரையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது இரண்டு குத்துப்பாட்டுகளைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டு சிம்பு அடம் பிடிப்பதே படம் வெளி வராததற்குக் காரணம்” என்கிறார் அதன் இயக்குநர் பாண்டிராஜ்.

மேலும் “படத்தின் இசையமைப்பாளர் குரளரசன் போட்டிருக்கும் பாடல்கள் அனைத்தும் குப்பை” என்றும் அவர் கூறியுள்ளார்.

“அதை நீங்கள் சொல்லக் கூடாது; ரசிகர்கள் முடிவு செய்யட்டும்” என்று கடிந்துகொண்டிருக்கிறார் குரளரசன்.

இதைப் பார்த்துக் கோபமடைந்த இயக்குநர் பாண்டிராஜ் ”தம்பி, நீ யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும். ஒரு நல்ல முதலாளிக்கு அழகு தனக்காக உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் அவனுக்கான ஊதியத்தை கொடுப்பது. இதுவரை எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தம்பி உனக்கு தூக்கம் வந்தால் போய் தூங்கு.  இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் மூலம் தான்  சந்தித்த போரட்டத்தையெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப் போகிறேன்” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.