Home Featured நாடு நாளை அம்னோ உச்ச மன்றக் கூட்டம்: யாரும் நீக்கப்படமாட்டார்கள் என்கிறார் கைரி!

நாளை அம்னோ உச்ச மன்றக் கூட்டம்: யாரும் நீக்கப்படமாட்டார்கள் என்கிறார் கைரி!

591
0
SHARE
Ad

khairyபுத்ராஜெயா – நாளை நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த ஆரூடத்திற்கு இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள கூட்டம் வழக்கமாக நடக்கும் கூட்டம் தான் என்றும், அக்கூட்டத்தில் எந்த ஒரு மூத்த அம்னோ உறுப்பினரும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படமாட்டார் எனத் தான் நம்புவதாகவும் கைரி தெரிவித்துள்ளார்.

“நான் 100% உறுதியாகச் சொல்கிறேன் நாளை மூத்த அம்னோ தலைவர்கள் யாரும் நீக்கப்படமாட்டார்கள்” என்று கைரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice