Home இந்தியா முதலீட்டாளர்கள் மாநாடு: 1 லட்சம் கோடியைத் தாண்டி முதலீடுகள்: ஜெயலலிதா உரை!

முதலீட்டாளர்கள் மாநாடு: 1 லட்சம் கோடியைத் தாண்டி முதலீடுகள்: ஜெயலலிதா உரை!

819
0
SHARE
Ad

09-1441785193-jaya-gim56சென்னை- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அனைத்துலக மாநாட்டைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இம்மாநாட்டில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பிரதிநிதிகளும், வெளிநாட்டில் இருந்து 1000 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நுழைவு வாயிலில் நாதஸ்வர மேளம் முழங்க முதலீட்டாளர்கள் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், ஜப்பான், கொரியா நாட்டுக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்திப் பார்வை யாளர்களைக் கவர்ந்தனர்.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டில் முதலமைச்சர்ஜெயலலிதா பேசியதாவது:

“தமிழகத்திற்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குதே இம்மாநாட்டின் நோக்கம்.

தமிழகம் உற்பத்தித்துறையில் பெரும் முதலீடுகளைக் குவித்து வருகிறது.வாகன உற்பத்தித்துறையில் தேசிய மையமாகத் தமிழகம் விளங்குகிறது. அதேபோல் நாட்டிலேயே அதிக சூரிய மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.

சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஆகையால் துணிந்து தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்.

தமிழக அரசு இலக்கு நிர்ணயித்த ரூ1 லட்சம் கோடியைத் தாண்டி முதலீடுகள் வந்துள்ளன.மிகுந்த மகிழ்ச்சி.

தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வரிச்சலுகை  அளிக்கப்படும். தமிழகத்தில் தொழில் தொடங்க 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்” என ஜெயலலிதா தனது உரையில் தெரிவித்தார்.