Home Featured நாடு புதிய கூட்டணியில் எதற்காக பாஸ்? அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும்!

புதிய கூட்டணியில் எதற்காக பாஸ்? அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும்!

665
0
SHARE
Ad

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100ஜார்ஜ் டவுன் – பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து, பக்காத்தான் ஆதரவாளர்களுக்கு அஸ்மின் அலி விளக்கமளிக்க வேண்டும் என பினாங்கு முதல்வரும், ஜசெக பொதுச்செயலாளருமான லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி தற்போது தேசிய முன்னணியுடன், குறிப்பாக அம்னோவுடன் இணக்கமாக இருந்து வருவதையும் லிம் குவான் எங் சுட்டிக் காட்டியுள்ளார்.

1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், ஏதாவது இரண்டு நிரூபியுங்கள் பார்ப்போம் என்று விமர்சகர்களை வலியுறுத்தும் அளவிற்கு பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், ஆளும்கட்சியுடன் ஹாடி நெருக்கமாக இருப்பதையும் லிம் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice