புதுடெல்லி- ஏமன் நாட்டுத் துறைமுகத்தில் சவுதி கூட்டுப் படைகள் அந்நாட்டிலுள்ள கிளர்ச்சிக்காரர்கள் மீது நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், எதிர்பாராதவிதமாக அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் தனக்கு வரவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஏமன் நாட்டில் செயல்பட்டு வந்த இந்தியத் தூதரகம் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டு விட்டதால் அது நம்பகத்தன்மையான செய்தியா என உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், பலியானதாகக் கூறப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிரோடு இருப்பதாகவும், அவர்கள் சவுதி கூட்டுப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மற்ற 7 பேரின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. அவர்களைத் தேடி வருகின்றனர்.
இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.