Home Featured நாடு “பத்திரிக்கை தர்மத்தைக் கடைபிடியுங்கள்” – சாஹிட் அறிவுரை!

“பத்திரிக்கை தர்மத்தைக் கடைபிடியுங்கள்” – சாஹிட் அறிவுரை!

492
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – செய்திகள் வெளியிடுவதில் இணைய செய்தி நிறுவனங்கள் (Online media) பத்திரிக்கை தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இணைய செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், நாட்டின் முக்கியச் செய்தி நிறுவனங்களாகத் திகழும் சக பத்திரிக்கைகள் அமைத்துள்ள முன்னுதாரணங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “செய்தியாளர்களுக்கு முழு சுதந்திரம் என்பது மேற்கத்திய நாடுகள் உட்பட இந்த உலகத்தில் எங்குமே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.” என்றும் சாஹிட் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“கத்தி முனையை விட பேனா முனை சிறந்தது தான். ஆனால் இன்றைய காலத்திற்கும், வயதிற்கும், விசைப்பலகை (Keyboard) தான் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பொறுப்பற்ற நபர் பயன்படுத்தும் பேனாவோ விசைப்பலகையோ பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும்” என்றும் சாஹிட் நேற்று நடைபெற்ற மலேசியா செய்தியாளர் நிறுவனம் (எம்பிஐ) – இந்த வருடத்திற்கான பெட்ரோனாஸ் செய்தியாளர் விருதுகள் நிகழ்ச்சியின் அறிமுக விழாவிற்கு முன்னதாகக் கூறியுள்ளார்.