Home இந்தியா தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

655
0
SHARE
Ad

C26DPONசென்னை – தமிழகச் சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இப்போதே கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.

வைகோ தலைமையிலான கூட்டணியில் திருமாவளவன் இணைந்துள்ளார். விஜயகாந்தை அண்மையில் பாஜக-வின் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூட்டணி தொடர்பாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.

திமுகவும் கூட்டணி அமைப்பது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

#TamilSchoolmychoice

பாஜக அண்மைக்காலமாக அதிமுக-விற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறிவருகிறது. ஜெயலலிதாவின் செயல்களைப் பாராட்டுகிறது.

எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பாஜக –அதிமுக கூட்டணி அமையும் வேளையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் அமைவது உறுதி.

இப்படிப்பட்ட சூழநிலையில், “தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைக்கும்” என்று பாஜக-வின் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் பாஜக வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும். வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக கூட்டணியில்தான் இப்போதும் விஜயகாந்த் உள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒரு பக்கம் ஜெயலலிதாவோடு நட்பு பாராட்டிக் கொண்டு தன்னிடம் உறவாடுவதை விஜயகாந்த் விரும்பவில்லை எனபதே உண்மை.

யார், யாருடன் கூட்டணி அமைக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.